Deep Fake தொழில்நுட்பத்தை பயன்படுத்த புதிய விதிமுறைகள்: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
Deep Fake தொழில்நுட்பம் என்பது ஒரு பெரிய பிரச்சினையாக மாறிவரும் நிலையில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த புதிய விதிமுறைகள் ஒரு வாரத்தில் முறைப்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ராஷ்மிகா மந்தனாவின் Deep Fake செய்யப்பட்ட வீடியோ வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் Deep Fake தொழில்நுட்பம் தற்போது சமூகத்திற்கு தீவிர அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அதற்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் இது குறித்து கூறிய போது Deep Fake தொழில்நுட்ப மூலம் உருவாக்கப்படும் போலி வீடியோக்களை கண்டறிதல், அவற்றை தடுத்தல், புகார் அளித்தல், விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய நான்கு கோணங்களில் கவனம் செலுத்த போவதாகவும் இந்த தொழில்நுட்பத்தை முறைப்படுத்துவது தொடர்பாக புதிய விதிமுறைகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
Edited by Siva