வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 14 டிசம்பர் 2023 (07:39 IST)

ஒரே நாளில் 234 பேருக்கு கொரோனா பாதிப்பு.. கேரளாவில் பொதுமக்கள் அச்சம்..!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 230 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அம்மாநில மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.  

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி மிகப்பெரிய மனித அழிவை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது தான் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருப்பதாக மக்கள் நிம்மதி அடைந்துள்ள நிலையில் மீண்டும் சிங்கப்பூர் உள்பட ஒரு சில நாட்டில் கொரோனா வைரஸ் பரவி வருவதாக வெளிவந்திருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.  கேரள மாநில சுகாதார துறையின் தகவலின்படி கடந்த 24 மணி நேரத்தில் 234 பேருக்கு 2 உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 949 ஆக அதிகரித்து உள்ளதாகவும் கூறப்படுவது மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
கேரளாவில் உள்ள பல பொதுமக்கள் தற்போது மாஸ்க் அணிந்து தான் வெளியே செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva