ராஜ்யசபா மீண்டும் ஒத்திவைப்பு: இம்முறை நாகலாந்து பிரச்சனையை எழுப்பிய எதிர்க்கட்சிகள்!
கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் நடந்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டு வரும் நிலையில் இன்று மீண்டும் மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
கடந்த சில நாட்களாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி அமளி செய்ததால் அவ்வப்போது நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமீபத்தில் நாகலாந்து மாநிலத்தில் 13 அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன
இதனையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செய்த அமளி காரணமாக 12 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 12 மணிக்கு மீண்டும் அவை கூடினாலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த பிரச்சனையை எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது