புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 1 டிசம்பர் 2021 (16:32 IST)

போராட்டத்தில் விவசாயிகள் இறந்ததாக சான்று இல்லை! – மத்திய அரசு பதில்!

விவசாய போராட்டத்தில் விவசாயிகள் பலர் இறந்ததாக கூறப்படும் நிலையில் அதற்கான சான்றுகள் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஒரு ஆண்டு காலமாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்ப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் வெறுமனே சட்டத்தை மட்டும் திரும்ப பெறாமல் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் போராட்டத்தில் விவசாயிகள் இறந்ததற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால் இழப்பீடு வழங்க இயலாது என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய போராட்டத்தால் 700 விவசாயிகள் வரை உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் ஆவணங்கள் இல்லை என மத்திய அரசு புறக்கணிப்பதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.