செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 25 ஜனவரி 2021 (17:56 IST)

மகளை நரபலி கொடுத்த பெற்றோர் ! அதிர்ச்சி சம்பவம்

அற்புதங்கள் நடத்துவதாகக் கூறி தங்களது 2 மகள்களை நரபலி கொடுத்த ஆந்திராவைச் சேர்ந்த தம்பதியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் சிவாலயம் என்ற பகுதியில் வசித்து வருபவர் புருசோத்தமன். இவர் ஒரு  கல்லூரியில் முதல்வர். இவரது மனைவியும் ஒரு பேராசிரியை.

இந்தத் தம்பதியினர் மீண்டும் உயிர்த்தெழுந்து வருவார்கள் என்று தங்களது  மகள்கள் இருவரையும் நரபலி கொடுத்துள்ளனர்.

இருமகள்களும் மீண்டும் உயிர்பெற்று வருவார்கள் எனக் காத்திருந்தானர். மகள்கள் குறித்துக் கேட்டதற்கு இதையே சொல்லிப் பிதற்றியுள்ளனர்.  இருவரையும் கைது செய்த போலிஸார் இதுகுறித்து போலீஸார் தம்பதியிடம் விசாரித்தபோது, நரபலி கொடுத்ததை ஒப்புக்கொண்டு வாக்கு மூலம் கொடுத்துள்ளனர்.மேலும் ஒருநாள் நேரம் கொடுத்தால் மகள்கள் உயிர்பெற்று வருவார்கள் என்று கூறியுள்ளனர்.இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.