1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 6 ஜனவரி 2021 (10:06 IST)

இந்து கோயிலுக்கு பாம் வைத்த விஷமிகள்: அக்கட தேசத்தில் இருந்த வந்த பேஷனா??

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஓம் சக்தி கோவிலுக்கு வெடி வைத்து தகர்த்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 
ஆந்திரப்பிரதேசத்தில் கடந்த ஒரு ஆண்டாக இந்து கோவில்களுக்கு தீ வைப்பது, சிலைகளை சேதப்படுத்துவது உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறுகிறது. இது வரை அங்கு 127 கோவில்கள் சேதப்பட்டுத்தப்பட்டுள்ளன. 
 
அந்த வகையில் இப்போது தமிழகத்தில் கோவிலை சேதப்படுத்தும் நடைமுறையை சில விஷமிகள் செய்து வருகின்றனர். ஆம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஓம் சக்தி கோவிலுக்கு வெடி வைத்து தகர்த்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மேல்மருவத்தூர் செல்வதற்காக மாலை போட்டிருந்த பக்தர்கள் இங்கு வழிபாடு செய்துவிட்டு புறப்பட பந்தல் அமைத்திருந்தனர். இந்த பந்தல் போடப்பட்டிருந்த இடத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்து வெடிக்கப்பட்டது. பக்கதர்களுக்கு காயமில்லை என்றாலும் இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.