1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : சனி, 2 ஜனவரி 2021 (11:26 IST)

பக்தர்களுக்கு ஆபாச பட லிங்க்: 5 திருப்பதி தேவஸ்தான் ஊழியர்கள் டிஸ்மிஸ்!

திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் ஐந்து பேர், பக்தர்களுக்கு ஆபாச பட லிங்க்கை அனுப்பியதாகவும் அவர்களும் ஆபாச படத்தை தொலைக்காட்சி மூலம் பார்த்ததாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் 5 ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
பக்தர்களுக்கு ஆபாச பட லிங்க் அனுப்பிய விவகாரத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட 5 ஊழியர்கள் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் தங்களை டிஸ்மிஸ் செய்ததற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். ஆனால் ஆந்திர உயர்நீதிமன்றம் அவர்களது மனுவை தள்ளுபடி செய்து விட்டது. இது போன்ற தகாத செயல்களில் ஊழியர்கள் ஈடுபட்டதற்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் அவர்களது கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் ஆந்திரா திருப்பதி தேவஸ்தானம் செய்த எடுத்த நடவடிக்கை சரியானது தான் என்று குறிப்பிட்டுள்ளது
 
திருப்பதி தேவஸ்தானம் அலுவலகத்திலேயே 5 பேர் ஆபாச படங்களை பார்த்து மட்டுமன்றி அதனுடைய லிங்குகளை பக்தர்களுக்கும் இமெயில் மூலம் அனுப்பி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது