திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (20:01 IST)

தங்கை மீது பாசம் வைத்த பெற்றோர்... தொட்டியில் வீசிக். கொன்ற 5 வயது அக்கா

ஒரு வீட்டில் இரண்டு குழந்தைகள் இருக்கும்போது ஒருவருக்கு அதிகப் பாசமும் மற்றவருக்கு குறைவாக அளவு பசமோ கொடுத்தால் பின்விளைவுகள் ஏற்படும் என்படுத்தும் என பலரும் கூறுவதுண்டு. அதுபோல் ஒரு சம்பவம் ஆந்திராவில் ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள துர்காசனம் என்ற பகுதியில் வசித்து வந்தவர்  காவியா. இவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் நிர்மலா ( 5வயது ) இளைய மகள் ஹேமஸ்ரீ11  மாதக் குழந்தை.

இந்நிலையில் பெற்றோர் வீட்டில் எப்போதும் இளைய மகள் மீது அதிகம் பாசம் வைத்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் மூத்த மகள் கோபம் அடைந்திருக்கிறார்.

இந்நிலையில் ஹேமஸ்ரீயை காவியா பக்கத்து வீட்டில் உறக்க வைத்துள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்துப் பார்த்த போது, குழந்தையைக் காணவில்லை. சுற்றி முற்றித் தேடியுள்ளார்.

அதன்பின்  தண்ணீர்த் தொட்டியில் குழந்தை பிணமாக இருந்ததைப் பார்த்து பெற்றோர் கதறியழுதுள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் விசாரணைமேற்கொண்டனர். அப்போது நிர்மலாவிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர்.  அதற்கு அவள் தன்னைவிட சகோதரி மீது பெற்றோர் அதிகம் பாசம் காட்டியதாள் தொட்டு போட்டேன் எனத் தெரிவித்துள்ள்ளார். இதைக் கேட்டுபோலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

சிறுமி மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த போலீஸார் முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.