செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (07:51 IST)

சாலை விபத்தில் சிக்கிய முன்னாள் முதல்வர்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதால் பரபரப்பு

சாலை விபத்தில் சிக்கிய முன்னாள் முதல்வர்:
முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திடீரென வாகன விபத்தில் சிக்கியதால் ஆந்திர மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்கள் இன்று விஜயவாடா-ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அவருக்கு முன்னரும் பின்னரும் தேசிய பாதுகாப்பு படையினரின் கார்கள் சென்று கொண்டிருந்தது 
 
இந்த நிலையில் திடீரென பசுமாடு ஒன்று காருக்கு குறுக்கே வந்ததை அடுத்து பேசிய பாதுகாப்பு படையினர்ர் சென்ற பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து பின்னால் வந்த கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதியதாகவும் இதில் நான்காவதாக வந்த சந்திரபாபு நாயுடு காரும் மோதியதாக தெரிகிறது 
இதனை அடுத்து முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் இருப்பினும் அவரது உயிருக்கு எந்தவித ஆபத்துமின்றி அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பியதாக செய்திகள் வெளிவந்தது 
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் சந்திரபாபு நாயுடு அவர்கள் திருப்பதிக்கு சென்ற போது கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது