1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2024 (15:51 IST)

உயிரிழந்த 2 மகன்களின் உடல்களை தோளில் சுமந்த பெற்றோர்.. ஆம்புலன்ஸ் வசதி கூட இல்லையா?

மகாராஷ்டிரா மாநிலத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இரண்டு மகன்களின் உடலை தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் தோளில் சுமந்து சென்றதாகவும் ஆம்புலன்ஸ் வசதி கூட அந்த பெற்றோருக்கு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கட்சிரோடு என்ற பகுதியை சேர்ந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்த நிலையில் இருவருக்கும் திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. உரிய சிகிச்சை பெறாததால் இரண்டு மகன்களும் மருத்துவமனை சிகிச்சையின் பலனின்றி உயிர் இழந்த நிலையில் இரண்டு மகன்களின் உடல்களை வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை என்று தெரிகிறது.

இதனை அடுத்து தாய் தந்தை ஆகிய இருவரும் தங்கள் மகன்களின் உடல்களை ஆளுக்கு ஒருவராக சுமந்து கொண்டு சென்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. உடல்களை வீட்டுக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி கூட இல்லையா?  அந்த அளவுக்கு மருத்துவமனைகளின் தரம் இருக்கிறதா என இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் கமெண்ட் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran