வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 24 ஆகஸ்ட் 2024 (12:54 IST)

வகுப்பறையில் மோதி கொண்ட மாணவர்கள்.. ஒருவர் பலி.. நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்..!

நாமக்கல்லில் வகுப்பறையில் மாணவர்கள் மோதி கொண்ட சம்பவத்தில் சக மாணவர் தாக்கியதால் ஒரு மாணவர் உயிரிழந்தார். இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
 நாமக்கல்லில் சக மாணவர் தாக்கி உயிரிழந்த பள்ளி மாணவரின் பிரேத பரிசோதனை தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், பெற்றோர் புகார் மனு அளிக்காததால் பிரேத பரிசோதனை செய்ய முடியாத நிலை  இருப்பதாகவும், இதனால் உயிரிழந்த மாணவனின் பெற்றோரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் ஆசிரியர் மற்றும் சம்மந்தப்பட்ட மாணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை புகார் அளிக்க மாட்டோம் என  பெற்றோர் தெரிவித்துள்ளனர். மேலும் வகுப்பறையில் மாணவர்கள் மோதி கொண்டதற்கு வகுப்பு ஆசிரியர் தான் காரணம் என்றும், பள்ளியில் உயிரிழந்ததால் பள்ளி நிர்வாகம் தான் புகார் அளிக்க வேண்டும்  என்றும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில் புகார் இல்லாமல் போலீசார் வழக்குப்பதிவு செய்ய முடியாததால் மாணவர் ஆகாஷ் உடலை பிரேத பரிசோதனை செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran