புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 7 செப்டம்பர் 2019 (13:36 IST)

”இந்தியா தோற்றது” – குத்தாட்டம் போட்ட பாகிஸ்தான் அமைச்சருக்கு குட்டு வைத்த நெட்டிசன்ஸ்

இந்தியாவின் சந்திரயான் 2 திட்டம் தோல்வியடைந்ததை கிண்டல் செய்யும் வகையில் ட்விட்டரில் பதிவிட்ட பாகிஸ்தான் அமைச்சரை கமெண்டில் திட்டி தீர்த்திருக்கின்றனர் இணையவாசிகள்.

நிலவின் தென் பகுதியை ஆராய சந்திரயான் 2 விண்கலத்தை கடந்த ஜூலை 22ம் தேதி நிலவுக்கு அனுப்பியது இந்தியா. பல்வேறு கட்டங்களை தாண்டி வெற்றிகரமாக நிலவை அடைந்த சந்திரயானின் விக்ரம் லேண்டர் நிலவிலிருந்து 2.5 கி.மீ உயரத்தில் சிக்னலை இழந்தது.

இதனால் திட்டம் தோல்வியடைந்தாலும் துவண்டு விடாமல் தொடர்ந்து முயற்சி செய்யுமாறு பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தியுள்ளார். இந்திய மக்களும், உலக நாடுகளுமே இந்தியா கிட்டத்தட்ட வெற்றிக்கு அருகில் சென்றுவிட்டதை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன. இந்நிலையில் சந்திரயான் 2 தோல்வியை கிண்டலடித்து பேசியுள்ளார் பாகிஸ்தான் அறிவியல் துறை அமைச்சர் ஃபவாத் ஹுசைன்.

தொடர்ந்து இந்தியாவையும், பிரதமர் மோடியையும் கிண்டல் செய்யும் தோனியில் பலர் ட்விட்டரில் பதிவிட்டபோது அதை தனது பக்கத்தில் ஷேர் செய்தார். அதற்காக இந்தியர்கள் அவரை திட்டி கமெண்ட் போட்டிருந்தார்கள். அதற்கு பதிலளிக்கும் வகையில் பதிவிட்ட அவர் “இந்தியர்கள் என்னவோ என்னால் சந்திராயன் திட்டம் தோல்வியடைந்தது போல் கிண்டல் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் கை நீட்ட வேண்டியது 900 கோடியை விரயம் செய்தவர்களை நோக்கி..” என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த பாகிஸ்தானியர்களே சிலர் இந்தியாவுக்கு ஆதரவாக பேசியுள்ளனர். அதில் ஒருவர் “இந்தியாவாவது சந்திரனுக்கு அருகில் சென்றுவிட்டார்கள். ஆனால் நாம்?”என கேள்வியெழுப்பியுள்ளார்.

மற்றொருவர் ”எங்கள் முயற்சி தோல்வியடைந்தாலும் நாங்கள் அனுப்பிய விண்கலனும், எங்கள் கொடியும் சந்திரனில் பறக்கிறது. ஆனால் உங்கள் தேசிய கொடியில் மட்டும்தான் சந்திரன் இருக்கிறது” என கூறியுள்ளார்.