ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (15:15 IST)

விண்வெளிக்கு செல்லும் இந்தியர்கள்!! – இஸ்ரோவின் அடுத்த திட்டம் இதுதான்!

நிலவில் சந்திரயான் – 2 நாளை மதியம் தரையிறங்க இருக்கும் அதேசமயம் இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி வைப்பதற்கான அடுத்த கட்ட ஏற்பாடுகளை வேகமாக செய்து வருகிறது இஸ்ரோ.

நிலவின் தென் துருவத்தை ஆராய சந்திரயான் 2 என்ற விண்கலத்தை கடந்த ஜூலை 22ல் விண்ணுக்கு அனுப்பியது இஸ்ரோ. வெற்றிகரமாக சந்திரன் வரை பயணித்த சந்திரயான் நாளை பிற்பகலுக்குள் நிலவில் இறங்க இருக்கிறது.

இந்நிலையில் ககன்யான் என்னும் திட்டத்தின் கீழ் இந்திய வீரர்களை விண்ணுக்கு அனுப்ப இருக்கிறது இஸ்ரோ. 2022க்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப வேண்டும் என இந்தியா திட்டமிட்டு வருகிறது.

அதன்படி ரஷ்யாவுடன் விண்வெளி பயணம் குறித்த சில ஒப்பந்தங்களையும் போட்டுள்ளது இந்தியா. இந்த விண்வெளி பயண திட்டத்தில் ரஷ்யாவும் இந்தியாவுக்கு தேவையான உதவிகளை செய்ய உள்ளது. இதற்காக இந்திய விமானப்படையை சேர்ந்த வீரர்களுக்கு பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் தேர்வு செய்யப்படுபவர்கள் ரஷ்யாவில் உள்ள யூரிககரின் விண்வெளி ஆய்வு மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு பயிற்சியளிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

வீரர்களுக்கு தேவையான விண்வெளி உடைகள் மற்றும் பிற சாதனங்களை ரஷ்யா வழங்க உள்ளது. மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் முதல் முயற்சி இது என்பதால் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு பிறகு மனிதனை விண்ணுக்கு அனுப்பும் நான்காவது நாடு சீனா என்பது குறிப்பிடத்தக்கது.