1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 29 அக்டோபர் 2019 (18:23 IST)

30 ஆண்டுகளுக்கும் மேல் ஆழ்துளை விபத்து இல்லை: எந்த நாட்டில் தெரியுமா?

காமெடி நடிகர் விவேக் ஒரு படத்தில் ஆள்துளை கிணற்றில் குழந்தை விழுவதும் டீயில் ஈ விழுவதும் தமிழ்நாட்டில் சாதாரணமான ஒன்று என்று கூறுவார். அந்த வகையில்தான் இந்தியாவில் அடிக்கடி ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் விழுந்து உயிரிழக்கும் துயர சம்பவங்கள் நடந்து வருகின்றன. இருப்பினும் இந்த துயரச் சம்பவங்களில் இருந்து நாம் பாடம் கற்றதாக தெரியவில்லை 
 
அமெரிக்காவில் கடந்த 1987ஆம் ஆண்டு ஜெசிக்கா என்ற ஒன்றரை வயது குழந்தை மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. இதனை அடுத்து அந்நாட்டின் மீட்புப்படைகள் 50 மணி நேரம் போராடி அந்த குழந்தையை மீட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து அமெரிக்க அரசு அதிரடியாக நாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் மூடப்படாமல் உள்ள ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என உத்தரவிட்டது. பொதுமக்களும் இந்த விஷயத்தில் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்ததை அடுத்து, ஒரு சில நாட்களில் அமெரிக்காவில் உள்ள அனைத்து ஆழ்துளை கிணறுகளும் முறைப்படி மூடப்பட்டு அதனை அரசு அதிகாரிகள் பார்வையிட்டு சான்றிதழும் கொடுத்தனர். இதனை அடுத்து 1987ஆம் ஆண்டுக்குப் பிறகு இன்று வரை ஒரு ஆழ்துளை கிணறு விபத்து கூட நடந்ததில்லை, ஒரு உயிர் கூட இழக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் இந்தியாவிலோ கிட்டத்தட்ட மாதம் ஒரு குழந்தை உயிரிழந்தும் நாம் இன்னும் பாடம் கற்காமல் உள்ளோம். ஒரு குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்து விட்டால் இரண்டு நாட்களுக்கு பரபரப்பாக பேசி விட்டு மூன்றாவது நாள் அதனை கடந்து சென்று விடுகிறோம். ஆழ்துளை கிணறுகளை மூடி வைக்க வேண்டும் என்ற அடிப்படை விழிப்புணர்வு இத்தனை உயிர்கள் பலியான பின்னரும் நமக்கு ஏற்படவில்லை
 
சுதீப்பின் மறைவிற்குப் பின்னரும் இந்த விழிப்புணர்வு நமக்கு ஏற்படவில்லை என்றால் நம்முடைய பொருப்பின்மை உச்சகட்டத்தில் இருக்கிறது என்பதுதான் அர்த்தம்