தொடரும் பயங்கரவாத அச்சுறுத்தல்; காஷ்மீரில் 5 பேர் சுட்டுக்கொலை
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் மேலும் 5 தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு பிறகு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் தொடர்ந்து வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு காஷ்மீரில் ஆப்பிள் வாங்க சென்ற வியபாரிகள் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனால் ஆப்பிள் வாங்க வருபவர்கள் நகரத்தில் உள்ள பொதுப்பகுதியிலேயே வாங்கி கொள்ள வசதிகள் செய்யப்பட்டன. இந்நிலையில் மேற்கு வங்கத்திலிருந்து காஷ்மீருக்கு வேலை நிமித்தம் சென்ற 5 தொழிலாளர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதனால் காஷ்மீரில் பதற்றநிலை நீடிக்கிறது.
இறந்தவர்கள் குடும்பத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.