விரைவில் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் உயரும்: ப சிதம்பரம்
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் ஒரே விலையில் உள்ளது என்பதும் கடந்த இரண்டு நாட்களாக டீசல் விலை மட்டும் குறைந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
நேற்று 19 காசுகளும் இன்று 18 காசுகளும் டீசல் விலை குறைந்த நிலையில் இனிவரும் நாட்களிலும் டீசல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 25 உயர்த்தப்பட்டது போல், விரைவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் உயரும் என்றும் கூறியுள்ளார்
பார்லிமென்ட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு தினந்தோறும் அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல் டீசல் விலை உயரும் என்றும் அவர் கணித்துள்ளார். அவரது கணிப்பு உண்மையானால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது