வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By mahendran
Last Modified: புதன், 18 ஆகஸ்ட் 2021 (16:57 IST)

பெகாசஸ் உளவு… ஒப்புதல் வாக்குமூலம்தான் – ப சிதம்பரம் கண்டனம்!

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் பெகாசஸ் உளவு சர்ச்சை குறித்து கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.

இஸ்ரேலின் பெகாசஸ் செயலி மூலமாக இந்திய அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்களை ஒட்டு கேட்டதாக வெளியான விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 500க்கும் மேற்பட்டோர் இந்த விவகாரத்தை விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது விரிவான பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என ஏற்கனவே எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இது சம்மந்தமாக சொலிசிட்டர் ஜெனரல் அளித்த பதிலில் ‘என்ன விதமான மென்பொருள்கள் பயன்படுத்தப் பட்டன என்பதை பொதுவெளியில் தெரிவிக்க முடியாது’ எனக் கூறியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் மத்திய அரசின் இந்த பதில் ஒப்புதல் வாக்குமூலம் போல உள்ளதாக தெரிவித்துள்ளார்.