வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 19 அக்டோபர் 2019 (16:51 IST)

சிதம்பரத்தை அடுத்து இன்னொரு முனனாள் அமைச்சர் – 12 மணிநேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை !

முன்னாள் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் பட்டேலிடம் நிலமோசடி வழக்குத் தொடர்பாக 12 மணிநேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது.

மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பிரபுல் பட்டேல். இவர் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமமுடன் நட்பில் இருந்த இக்பால் மிர்ச்சி நிறுவனத்தோடு சேர்ந்து நிலமோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் அவர் அமலாக்கத்துறை அதிகாரிகளால் நேற்று 12 மணிநேரம் விசாரணை செய்யப்பட்டுள்ளார். இந்த விசாரணையில் அவர் முன்பு வகித்து வந்த விமான போக்குவரத்து துறை தொடர்பான விவகாரங்களும் கேட்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்றும் அவரை விசாரணைக்கு அழைத்துள்ளது அமலாக்கத்துறை.

மகாராஷ்டிராவில் இன்னும் இரு தினங்களில் தேர்தல் வரவுள்ள நிலையில் பாஜக போட்டியாக இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகரான பிரபுல் படேல் விசாரிக்கப்படுவது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தவே எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சிதம்பரம் போல பிரபுல் படேலும் விரைவில் கைது செய்யப்படலாம் எனவும் செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன.