புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 2 ஜூலை 2019 (21:29 IST)

கடலில் கொட்டப்படும் காலாவதியான மருத்துப்பொருட்கள் : பகீர் தகவல்

கேரளாவில் உள்ள கோவளம் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில்,, மருத்துவமனை, கிளீனிக், போன்றவற்றிலிருந்து காலாவதியான மருந்துப்பொருட்கள் கொட்டப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.இதனால் மக்களுக்கு பல்வேறு அபாயம் ஏற்படப் போவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எச்சரிக்கை விடுத்துவருகின்றனர்.
சுற்றுலாப்பயணிகள் அதிகம் வந்து செல்லும் சென்னை - பாண்டிச்சேரி நெடுஞ்சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் படகு குழாம் அமைந்துள்ளது. இங்குள்ள பஹ்ஹிங்காம் கால்வாய் வங்காள விரிகுடா கடலில் கலக்கின்றது. எனவே இப்பகுதியில் பெரும்பாலான காலாவதியான மருந்துபொருட்களை, மக்கள் நடமாட்டமுள்ள இந்தக் கடற்கரைப் பகுதியில் இரைத்துச் செல்வதால் இந்த பொருட்கள் எல்லாம் பஹ்ஹிங்காம் கால்வாய் வழியாக வங்காள விரிகுடா கடலில் நேரிடையாகக் கலந்து இவை மீன்களுக்கும்,கடல் வாழ் உயிரினங்களுக்கும் ,அதை உண்ணும் மனிதர்களுக்கும் பெரிய தீமைகள் , உபாதைகள் ஏற்படும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை  தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.