மீராமிதுனை வச்சி செய்யும் வனிதா: பிக்பாஸ் 5-ஆம் நாள்

Last Updated: சனி, 29 ஜூன் 2019 (15:57 IST)
5-ஆம் நாள் பிக்பாஸ் நேற்று ஒளிபரப்பானது. அதில் வழக்கம்போல காலை ஏ சின்ன மச்சான் பாட்டுக்கு அனைவரும் வழக்கம் போல உற்சாகமாக நடனம் ஆடினர். வனிதா விஜயகுமார் வீட்டின் தலைவியாக உள்ளார்.
ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சண்டி சச்சரவு இருக்கதான் செய்கிறது. அதில் வனிதா மீரா மிதுனை அழைத்து நீ மோகன் சார் கிட்ட  நடந்தது சரியில்லை என அவரே கூறினார் என்றும், அப்படி நடந்துகொள்ளக் கூடாது என அறிவுறுத்துகிறார். ஆனால் அவரோ அதற்கு  அவருக்கு நான் பொண்ணு போல பண்ணலாம் எனக் கூறிக் கொண்டே சென்று விடுகிறார். இந்த விஷயம் அனைவருக்கும் தெரியவர பெரிய  பிரச்சனையாக மாறுகிறது. 
வனிதா இதை விடாமல் சத்தம் போட்டு பேசுகிறார். வனிதாவுக்கு ஆதரவாகக் மதுமிதாவும் பேசுகிறார். மேலும் மதுமிதா காது கொடுத்து  எதையும் கேட்பதில்லை என கூறுகிறார். இதனை தொடர்ந்து பாத்திரம் தேய்ப்பதில் பிரச்சனை மீராமிதுனுக்கும், கேப்டனான வனிதாவுக்கும்  வருகிறது. இதனை மீராமிதுன் தர்ஷனிடம் போய்  தினமும் என்னை அழ வைப்பதாவும் சொல்கிறார். இறுதியில் சேரன் தலையிட்டு, நீ இங்கு  இருக்க விருப்புகிறாயா? என பல கேல்விகளை முன் வைத்து, புத்தி சொல்லி, நான் இரவில் பாத்திரம் தேய்ப்பதாக சொல்லி பிரச்சனையை  ஒருவழியாக முடிக்கிறார்.
 
இதே விஷயத்திற்காக வனிதாவுக்கும் சாக்‌ஷிக்கும் இடையே பிரச்சனை வருகிறது. வனிதா சாக்‌ஷியிடம் நீ அவளுக்கு ஆதாரவு தருகிறாய். ஆனால் அவளே எதையும் கேட்பதே இல்லை. மேலும் அவள் ஒன்றும் சின்ன குழந்தை இல்லை. வெளியில ஆர்மி ஆரம்பிக்கதான் இங்க வருகிறார்கள் என்று சாக்‌ஷியை பேசவிடாமல் தானே பேசிக்கொண்டு இருக்கிறார்.
 
வனிதா
 
பிக்பாஸ் அவருக்கு கொடுத்த டாஸ்கின்படி, மறக்கமுடியாத நாள் எது? வனிதா தன் மகன் பிறந்த கதையையும், மகன் தனக்காக ஒருநாள்  போத்தீஸையே வாங்கி தருவதாகவும் கூறினார் என்றார். மகன் விஜய் ஸ்ரீஹரி தன்னை புரிந்து கொண்டு மீண்டும் தன்னிடம் வர வேண்டும்  என்ற எதிர்பார்ப்பில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதாக வனிதா விஜயகுமார் முதல் நாள் தெரிவித்திருந்தார். அதையே  இப்போதும் பேசினார்.
கவின்
 
நீங்க யாரை ரொம்ப மிஸ் பண்றிங்க என்பதிற்கு, தன் மாமாவை ரொம்ப மிஸ் பன்ணுவதாகாவும், நாங்கள் கஷ்டப்பட்ட காலத்தில் மாமாதான்  உதவி செய்ததாகவும் கூறி, அழதுக்கொண்டே பார்ப்பதற்கு கண்கள் சிவந்து காணப்பட்டார்.
 
பாத்திமா பாபுவும் குழந்தைகளை பற்றியும் கூறினார். சாண்டி இந்த சண்டையை பார்த்து சந்தோஷமாக இருந்தபோதே எனக்கு தெரியும்,  அமைதியாக இருக்கும் இந்த வீடு வாரும் நாட்களில் என்ன பாடுபடப்போகிறது என்று கூறி, நான் அப்பவே சொன்னன்ல என்கிறார். உண்மை  சொல்லப்போனால் வனிதா கத்துவதால் கெட்டவலும் இல்லை. மீரா மிதுன் சொல்வதெல்லாம் உண்மையும் இல்லை. பொருந்திருந்து இனி  வரும் நிகழ்ச்சியில் என்ன நடக்கப்போகிறது என்று பார்ப்போம். 
 
இவ்வாறு பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் அழுது கொண்டே இருக்கிறார்கள். இப்படி பிக் பாஸ் வீடு சோக வீடாக இருப்பது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. முதல் நாளே காதல் காட்சி வைத்த பிக் பாஸா, இப்படி சோக கீதம் பாட வைப்பது என்று  பார்வையாளர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :