செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 1 ஜூலை 2019 (13:57 IST)

மதுமிதாவை டார்கெட் செய்த ஹவுஸ்மெட்ஸ் - பிக்பாஸ் 7-ஆம் நாள்

பிக்பாஸ் சீசன் 3 தொடங்கி 7 நாட்கள் முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் எப்பதான் வருவார் என பிக்பாஸ் போட்டியாளர்களும், மறுபக்கம் பிக்பாஸ் ரசிகர்களும் ஆவலோடு காத்திருந்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று ரொம்ப சுவாரஸ்யமாகவும் இருந்தது. இதில் அனைத்து போட்டியாளர்களும் மதுமிதாவை டார்கெட் செய்து சண்டை போட்டனர். விஷயம் என்னவென்றால் கமல், பிக்பாஸ் வீட்டில் நடந்தவற்றை செய்தி வாசிப்பது போன்று சொல்லவேண்டும் என்று பாத்திமாபாபுவிடம் கேட்க, அவரும் வீட்டில், நம் வீட்டில் இருக்கும் அபிராமி வீட்டில் இருக்கும் ஒருவரை காணவராக எண்ணிக்கொண்டும்,  தண்ணீர் பாட்டிலை குழந்தையாக நினைத்து நாப்கின் போடுவதையும் சொல்கிறார்.
 
இதனை கேட்டுக்கொண்டிருந்த மதிமிதா என்ன இருந்தாலும் நீங்க அப்படி பேசி இருக்ககூடாது என்றும், இதே நானாக இருந்தால், அதாவது நான் ஒரு தமிழ் பொண்ணு அதனால அபிராமி செய்ததுபோல நான் செய்திருக்க மாட்டேன் என சொல்ல, இதுவே பிரச்சனை ஆரம்பிக்க மிகப்  பெரிய காரணமாக அமைந்தது.
இதற்கு இடையே கமல் சார் ஒரு பிரேக் விடுகிறார். அதில் அனைத்து பிக்பாஸ் போட்டியாளர்களும், சண்டை போட ஆரம்பித்துவிட்டார்கள். ஷெரின் என்ன எதற்கெடுத்தாலும் தமிழ் பொண்ணு தமிழ் பொண்ணு சொல்ற என அபிராமிக்கு சப்போர்ட் செய்கிறார். இன்னொரு பக்கம்  கவினுக்கும் மதுமிதாவுக்கும் பயங்கர சண்டை வருகிறது. அதே போல வனிதாவுக்கும் மதுமிதாவுக்கும் என பெரிய சண்டையாக உருவாகிறது.  இதற்கு இடையே பிரேக் முடிந்து வரும் கமல் எப்படி விட்டுட்டு போன வீடு இப்படி இரணடாக மாறிடுச்சு என்றும், இப்பதான் இவர்கள் கேமரா  இருப்பதை மறந்து தங்களின் உண்மையான சுயரூபத்தை காண்பிக்க ஆரம்பித்துள்ளனர் என்றும் கூறுகிறார். 
எப்படியோ ஒரு வழியாக இந்த பிரச்சனையை முடித்து வைக்கும் கமல், பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களுக்கும் ஒரு  ஹார்ட் ஷேப் பில்லோ கொடுத்து, இதனை உங்களுக்கு பிடித்த நபருக்கு காரணத்தோடு கொடுக்க சொல்கிறார். இதில் அதில பில்லோக்களை  சரவணன் பெற்று முதல் இடத்தில் இருக்கிறார்.
 
சென்ற வாரத்தில் வனிதா கேப்டனாக இருந்தார். இந்த வாரம் ஒரு புதிய கேப்டனாக மோகன் ராவ் தேர்ந்தெடுக்கப்படுகிறார். யார் யார் எந்த  டீம் என பிரித்து கொள்கின்றனர். இதற்கு இடையே அபிராமி நான் மதுமிதா பக்கத்தில் இனிமேலும் படுக்கமாட்டேன் என கூறுகிறார். இதனால்  லாஸ்லியாவிடம் சென்று எனக்காக படுக்கையை மாற்றிக்கொள்ளவேண்டும் என கேட்டு மாற்றிக்கொள்கிறார்.

இவ்வாறு இந்தா வாரம்  நாமினேஷன் இல்லை என்றும் வரும் வாரத்தில் கண்டிப்பாக இருக்கும் என்றும் கூறுகிறார் கமல். இனி வரும் நாட்களில் பிக்பாஸ் வீட்டில் புது தலைமையில் என்ன வரும் மதுமிதா புலம்புவது போல், இது ஒரு கேம் ஷோவா அல்லது நான் நானாக இருக்க வேண்டுமா என்ற  கேள்வியை முன்வைக்கிறார். வரும் நாட்களில் யார் எப்படி மாறப்போகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.