இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் வெளியேறப்போவது இவர்தான்!

Last Updated: செவ்வாய், 2 ஜூலை 2019 (12:03 IST)
பிக்பாஸ் வீட்டில் 8-வது நாளான நேற்று குறிப்பிட்டு கூறவேண்டுமானால் நாமினேஷனை சொல்லலாம். நாமினேஷன் பட்டியலில் கவின்,  பாத்திமா பாபு, சேரன், சாக்‌ஷி, சரவணன், மீரா மிதுன், மதுமிதா ஆகியோர் உள்ளனர்.
யார்; யார் யாரை நாமினேட் செய்தனர்:
 
மதுமிதா கவின், பாத்திமா பாபுவையும் நாமினேட் செய்தார். ஷெரின், சாக்‌ஷி அகர்வால், அபிராமி, கவின் ஆகியோர் மீராவையும்  மதுமிதவையும் நாமினேட் செய்தார்கள். இவர்கள் நால்வரும் ஒரே காரணத்தை சொல்லி மீராவையும், மதுமிதாவையும் நாமினேட் செய்தனர்  என்பது குறிப்பிடத்தக்கது. மீரா அபிராமியையும், சாக்‌ஷி அகர்வாலையும் நாமினேட் செய்தனர். பாத்திமா பாபு சரவணன் மற்றும் கவின்  இவர்களை நாமினேட் செய்தார். 
 
சரவணன் யாரை நாமினேட் செய்துள்ளார் என்று கேட்டால், சேரனையும், பாத்திமா பாபுவையும் நாமினேட் செய்துள்ளார். அதற்கு அவர்  சொன்ன காரணம் பாத்திமா பாபு எல்லா விஷயத்திலும் தலையிடுகிறார். சேரன் தான் ஒரு இயக்குநர் என்பதினால் இங்கே எல்லாரையும்  ட்டாமினேட் செய்கிறார் என்பதுதான். 
சேரன் லாஸ்லியாவையும், தர்ஷனையும் நாமினேட் செய்துள்ளார். வனிதா மீராவையும் சேரனையும் நாமினேட் செய்தார். இதுதான்  இருக்கிறதிலேயே பெரிய ட்விஸ்டு. மோகன் வைத்யா பாத்திமா பாபுவையும், சேரனையும் நாமினேட் செய்தார். இதற்கு சேரனுக்கு நான்  கேப்டன் ஆனதிலிருந்து சேரன் கோபமாக இருப்பதாக காரணம் கூறினார். ரேஷ்மா மதுமிதாவையும், பாத்திமா பாபுவையும் நாமினேட் செய்தார்.
 
அதே போல முகென் ராவ் மீரவையும் சேரனை நாமினேட் செய்தார். சாண்டி மாஸ்டர் சேரனையும், மதுமிதாவையும் நாமினேட் செய்தார். லாஸ்லியா மீராவையும், சரவணனையும் நாமினேட் செய்தார். தர்ஷன் சாக்‌ஷி மீராமிதுன் இவர்களை நாமினேட் செய்தார். இப்படி பிக்பாஸ்  போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தனக்கு பிடிக்காத அல்லது ஒத்துவராத நபர்களை நாமினேட் செய்தார்கள்.
 
திடீரென சாக்‌ஷி அகர்வால் அம்மாவை நினைத்து அழத்தொடங்கினார். உடனே கவின் சாக்‌ஷிக்கு தோல் மீது கைப்போட்டெல்லாம் ஆறுதல்  கூறினார். இதுக்கெல்லதுக்கும் மேல இதுவரை ஒற்றுமையாக இருந்த அபிராமியும், சாக்‌ஷி அகர்வாலுக்கும் இடையே பிரச்சனை தொடங்கியது.

சக்‌ஷி அபிராமியிடம் நான் உன்னிடம் பரோட்ட கேட்டதை நீ அனைவரிடமும் போய் சொல்லிட்ட, ஆனா நீ எந்த விஷயம் சொன்னாலும் அதை நான் ஒருபோதும் வெளியில் சொல்லுவதில்லை என்று கூறுவதோடு நாமினேஷன் லிஸ்டில் என்னுடைய பெயர் வந்ததுக்கு  வருத்தப்படாமல் சேரன் சார்ரோட பெயர் எப்படி வந்தது என்று வருத்தப்படுகிறாய் என்று சண்டையிடுகிறார், அன்பு மனதிலிருந்து வரவேண்டும் நீ நடிக்காத என்று சண்டை போடுகிறார். 
பிக்பாஸ் அனைவருக்கும் Dog and the Bone என்ற டாஸ்க் கொடுத்தார் இதில் அனைத்து பிக்பாஸ் போட்டியாளர்களும் இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடுகின்றனர். இவை கொஞ்சம் பிக்பாஸ் இருக்கும் பிரச்சனைகளை மறக்க வைத்தது என்றே சொல்லவேண்டும். 
 
இந்த வார நாமினேஷன் பட்டியலில் உள்ள கவின், பாத்திமா பாபு, சேரன், சாக்‌ஷி, சரவணன், மீரா மிதுன், மதுமிதா இந்த 7 பேரில் யார் முதலில் செல்வார்கள் என்பது மக்களின் ஓட்டுகளில்தான் உள்ளது. பிக்பாஸ் போட்டியாளர்களில் ரசிகர்களின் ஆதரவு பாத்திமா பாபுவுக்கு  இருக்குமா? என்ற சந்தேகம் உள்ளது. பொதுவாக பார்த்தால் மீராமிதுனைதான் வெளியேற்ற வேண்டும். ஆனால் அவரை அனுப்பிவிட்டால், அங்கே சண்டை போட அதாவது சுவாரஸ்யம் இருக்காது. யார் வெளியேறப்போகிறார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


இதில் மேலும் படிக்கவும் :