வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 20 மார்ச் 2022 (10:59 IST)

இந்தியாவின் முதல் மூளை ஆராய்ச்சி மையம் சென்னையில் திறப்பு!

இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் மூளை ஆராய்ச்சி மையம் திறக்கப்பட்டுள்ளது
 
சென்னை ஐஐடி வளாகத்தில் மனித மூளை செயல்பாடுகள் குறித்து ஆராய மூளை ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதுதான் இந்தியாவிலேயே முதல் மூளை ஆராய்ச்சி மையம் என்றும் கூறப்படுகிறது
 
இந்த மூளை ஆராய்ச்சி மையத்தை மத்திய அரசின் முதன்மை ஆராய்ச்சியாளர் விஜயராகவன் என்பவர் திறந்துவைத்தார். இது குறித்து பேசிய விஜயராகவன் உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் மூளையின் அளவை மைக்ரோ மீட்டர் என்ற அளவில் உருவாக்க இருப்பதாகவும் இதனை அடுத்து மூளை சார்ந்த நோய்கள், மூளையின் வளர்ச்சி, மூளை அறுவை சிகிச்சைகள் குறித்த புரிதல்கள் தெளிவாகிவிடும் என்றும் தெரிவித்தார்