பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?
கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதையும் 5 மாநில தேர்தலுக்கு பின்னர் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து ஒரே விலையிலேயே பெட்ரோல் டீசல் விலை விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதனை அடுத்து சென்னையில் பெட்ரோல் இன்று ஒரு லிட்டர் ரூபாய் 101.40 என்றும் சென்னையில் டீசல் இன்று ஒரு லிட்டர் ரூபாய் என்றும் 91.43 என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவில் இருந்து 20 சதவீதம் சலுகை விலையில் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு வர இருப்பதால் இனி பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்றும் மாறாக பெட்ரோல் டீசல் விலை குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.