1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Webdunia
Last Updated : புதன், 6 மே 2026 (08:47 IST)

முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்.. அடம்பிடிக்கும் மம்தா பானர்ஜி..! டிஸ்மிஸ் செய்யப்படுவாரா?

முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்.. அடம்பிடிக்கும் மம்தா பானர்ஜி..! டிஸ்மிஸ் செய்யப்படுவாரா?
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 206 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இருப்பினும், இந்த தோல்வியை ஏற்க மறுத்துள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, "தேர்தல் முடிவுகள் முறைகேடாக பறிக்கப்பட்டுள்ளன" என கூறி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார்.
 
"நாங்கள் தேர்தலில் தோற்கவில்லை; மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் இணைந்து வெற்றியை திருடிவிட்டன. தேர்தல் ஆணையமே எங்களுடைய உண்மையான எதிரி," என மம்தா பானர்ஜி ஆவேசமாக தெரிவித்துள்ளார். 
 
மேலும், வாக்குச்சாவடியில் மத்திய படைகள் தன்னை தாக்கியதாகவும், ஒரு பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த இக்கட்டான சூழலில் ராகுல் காந்தி உள்ளிட்ட 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 
மறுபுறம், மம்தாவின் இந்த பிடிவாதம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என சட்ட வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். மேற்கு வங்க சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதால், ஆளுநர் தன்னிச்சையாக சட்டமன்றத்தை கலைக்க முடியும் என வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 
 
மம்தாவை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வலியுறுத்தியுள்ளார். மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மம்தாவின் எதிர்ப்பு அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva