1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 23 மார்ச் 2020 (12:04 IST)

பேருந்தின் இருக்கையில் ஒருவர் மட்டுமே அமர அனுமதி: புதுவையில் அதிரடி

பேருந்தின் இருக்கையில் ஒருவர் மட்டுமே அமர அனுமதி
கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் தமிழகத்திலும் புதுவையிலும் கொரோனா வைரஸ் பரவி வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதனால் இரு மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன
 
பெரும்பாலும் வீட்டை விட்டு மக்கள் வெளியேற வேண்டாம் என்றும் அத்தியாவசிய பணிகள் காரணமாக வெளியேறினாலும் தகுந்த பாதுகாப்புடன் வெளியே வரவேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி வருகின்றன
 
இந்த நிலையில் புதுவை மாநிலம் ஏற்கனவே தனது எல்லைகளை மூடி விட்ட நிலையில் தற்போது புதுவை மாநிலத்தில் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதனடிப்படையில் புதுவையில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் ஒவ்வொரு இருக்கைக்கும் ஒருவர் மட்டுமே உட்கார அனுமதிக்கப்படுகிறது. இரண்டு பேர் உட்காரும் இருக்கையாக இருந்தாலும் மூன்று பேர் உட்காரும் இருக்கையாக இருந்தாலும் ஒருவர் மட்டுமே உட்கார வேண்டும் என்றும், நின்று கொண்டு பயணம் செய்ய பயணிகள் அனுமதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் இதுபோன்ற சில அதிரடி நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்பதால் புதுவை பொதுமக்களும் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது