வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 28 மே 2021 (18:42 IST)

பிரசாதத்தில் கஞ்சா வைத்து பாலியல் பலாத்காரம்… ராஜஸ்தான் பாபா கைது !

ராஜஸ்தானில் பெண் பக்தர்களுக்கு பிரசாதத்தில் பிரசாதம் வைத்துக் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த பாபாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பங்க்ரோட்டா என்ற பகுதியில் முகுந்ப்புரா ஆசிரம் இயங்கி வருகிறது. இந்த ஆசிரமம் யோகேந்திர மேத்தா என்பவரால் நடத்தப்பட்டு வருகிறது.

இதேபோல் டெல்லி சாலையிலும் இங்கும் யோகேந்திர மேத்தாவே ஆசிரம் நடத்தி வந்துள்ளார்.  இங்கு தினமும் மக்கள் வந்து சென்றுள்ளனர். இந்நிலையில், இங்குவந்தும் செல்லும் பெண்களுக்கு பாபா பஞ்சா கலந்த இனிப்பு பிரசாரங்கலை வழங்கி அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகப் பல பெண்கள் புகார் கூறியுள்ளனர்.  

இதையடுத்து கடந்த மே மாதம்  5 ஆம் தேதி யோகேந்திர மேத்தா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.