திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 26 ஆகஸ்ட் 2020 (19:17 IST)

’’கைலாசா’’ நாட்டில் விவசாயம் செய்ய ஒருவர் விருப்பம்...நித்யானந்தாவுக்கு கடிதம்

இந்திய அரசால் தேடப்பட்டு வரும் பாலியல் குற்றவாளி நித்யானந்தா, ’கைலாஷா’ என்ற தனிநாட்டை அமைத்துள்ளதாக கூறியதோடு அந்த நாட்டின் கரன்சியையும் சமீபத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் ஐநாவின் அனுமதி பெற்ற இந்த நாட்டில் விரைவில் மக்கள் குடியேறுவார்கள் என்றும் அந்த நாட்டிற்கு தானே அதிபர் என்றும் அவர் பிரகடனப்படுத்திக் கொண்டார்

இந்த நிலையில் மதுரையை சேர்ந்த ஓட்டல் அதிபர் ஒருவர் ’கைலாஷா’ நாட்டில் தங்களது ஓட்டல் கிளைகளை தொடங்க அனுமதிக்க வேண்டும் என வீடியோ ஒன்றின் மூலம் கேட்டுக் கொண்டார். இந்த வீடியோவுக்கு நித்தியானந்தா பதில் அளித்தார்.

அதில்’கைலாஷா’ நாட்டில் உங்களுடைய ஓட்டல் கிளை அமைக்க அனுமதிக்குமாறு எனது அதிகாரிகளுக்கு நான் உத்தரவிடுகிறேன் என்றும், இதுகுறித்து விரைவில் எங்களது அதிகாரிகள் உங்களை தொடர்பு கொள்வார்கள் பொது மக்கள் வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்ட உடன் ’கைலாஷா’ நாட்டில் உங்கள் ஹோட்டல் திறப்பதற்கு கண்டிப்பாக அனுமதி கிடைக்கும் என்றும் கூறினார்.

இதையடுத்து, இன்று கைலாசாவில் விவசாயம் நடத்த அனுமதி கோரி நித்யானந்தாவுக்கு மதுரையைச் சேர்ந்த  விவசாயி பாண்டிதுரை என்பவர் கடிதம் எழுதியுள்ளார்.

ஏற்கனவே மதுரை உள்ளிட்ட நான்கு மாவட்ட மக்களுக்கு முன்னுரிமை என்று சர்ச்சை சாமி நித்யானந்தா கூறியிருந்த நிலையில் இப்போது இன்னொருவர் கடிதம் எழுதியுள்ளார்.

இல்லாத ஒரு நாட்டிற்கு நாணயங்களை வெளியிட்டதோடு தற்போது ஓட்டலும் நடத்த அனுமதி கொடுத்துள்ள நித்தியானந்தா அடுத்து இதற்கு சொன்ன சொல்வார் என்றும் சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.