1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 21 பிப்ரவரி 2022 (19:05 IST)

இந்தியாவில் மேலும் ஒரு தடுப்பூசிக்கு அனுமதி!

இந்தியாவில் ஏற்கனவே மூன்று தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில்  தற்போது மேலும் ஒரு தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது 
 
பயாலஜிக்கல் இ நிறுவனத்தின் கோர்பெவாக்ஸ் என்ற தடுப்பூசியை அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்த தடுப்பூசியை 12 முதல் 18 வயதுக்கு மட்டுமே செலுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது 
 
ஏற்கனவே இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு உள்பட 3 தடுப்பூசிகள் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது