திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 21 பிப்ரவரி 2022 (18:40 IST)

நடிகர் சசிக்குமாரின் படத்தைப் புகழ்ந்த பாலிவுட் இயக்குநர்.!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்  - நடிகர் சசிகுமார். இவரது இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான படம் சுப்பிரமணியபுரம். இப்படத்தில் ஜெய் ஹீரோவாகவும், சுவாதி ஹீரோயயினாகவும் நடித்தனர்.

இப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படம் வெளியாகி 10 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் இப்படம் தன்னைக் கவர்ந்துள்ளதாகவும் கடந்த 10 ஆண்டுகளில் தனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் சுப்பிரமணியபுரம் எனப் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யக் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில்  சசிக்குமார் இயக்கு நர் அனுராக் காஷ்யப்பை சந்தித்துப்பேசினார்.  நீண்ட நாள் கழித்து அவரைச் சந்திப்பதாகவும் சசிக்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.