1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 21 பிப்ரவரி 2022 (17:33 IST)

உலகளவில் பிரபலமான தியேட்டரில் ரிலீஸாகும் ''வலிமை''.. டிக்கெட் விலை ?

வலிமை படம் இன்னும்  5 நாட்களில் வெளியாகவுள்ள நிலையில் உலகில் பிரபலமான தியேட்டரில் இப்படம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாக உள்ளது.

கடைசியாக அஜித்தின் நேர்கொண்ட பார்வை வெளியாகி இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் வெளியாகிறது. அஜித் என்னை அறிந்தால் படத்துக்குப் பிறகு போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.  மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் ஆக்சன் காட்சிகளை புரொமோவாக போனிகபூர் ரிலீஸ் செய்து வருகிறார். இன்று, பைக் சேசிங்க்  மற்றும் ஸ்டண்ட் காட்சிகளை அவர் வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருஜ்கிறது.

இ ந் நிலையில், உலகில் பிரபலமான  பாரிஸ் தீ கிராண்ட்  ரெக்ஸ்  என்ற தியேட்டரில் அஜிடத்தின் வலிமை படம் பிப்ரவரி 25 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக தியேட்டர்  நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இங்கு ஒருடிக்கெட்டின் விலை ரூ. 1690 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.