செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 22 மார்ச் 2020 (16:07 IST)

இந்தியாவில் மேலும் ஒரு கொரோனா பலி: எண்ணிக்கை 7ஆக உயர்வு

இந்தியாவில் மேலும் ஒரு கொரோனா பலி
கொரோனா வைரசால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று வரை நான்காக இருந்த நிலையில் இன்று மேலும் 2 பேர் மரணம் அடைந்ததால் அந்த எண்ணிக்கை 6 ஆக இருந்தது. இன்று மட்டும் பாட்னாவை சேர்ந்த இளைஞர் ஒருவரும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி இந்தியாவில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இந்தியாவில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது
 
குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்துவிட்டார். இதனை அடுத்து இன்று ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மகாராஷ்டிரா, பீகார் மாநிலங்களை தொடர்ந்து தற்போது குஜராத்திலும் ஒரு உயிர் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அனைத்து மாநில அரசுகளும் கொரோனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்றும் இப்போதைக்கு இது ஒன்றுதான் வழி என்றும் கூறப்பட்டு வருகிறது. எனவே நாளை முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பிருக்கிறது என்றும் கூறப்படுகிறது