1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Updated : சனி, 10 செப்டம்பர் 2016 (21:17 IST)

நடிகை ரம்யா மீது மேலும் ஒரு வழக்கு!

நடிகை ரம்யா மீது மேலும் ஒரு வழக்கு!
மத்திய ராணுவ அமைச்சர் மனோகர் பரிக்கர் கூறிய கருத்திற்கு எதிர்கருத்து கூறியதால், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பியான நடிகை ரம்யா மீது ஏற்கனவே ஒரு தேசத் துரோக வழக்கு நடைபெற்று வருகிறது.


 
இந்நிலையில், அவர், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, ''சுதந்திரப் போராட்டத்தின் போது, ஆர்எஸ்எஸ் அமைப்பினர், ஆங்கிலேயர்களுடன் கூட்டு வைத்திருந்தார்கள்'' என்றார்.

இதையடுத்து, அவர் மீது வழக்கறிஞர் வசந்த் மரகடா என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், புகாரை ஏற்கப்படவில்லை. இதனால், அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகை ரம்யா மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.