1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 மே 2023 (11:14 IST)

காஷ்மீர் தேர்தல் நடத்தும் தைரியம் பாஜகவுக்கு இருக்காது! – உமர் அப்துல்லா கருத்து!

Omar Abdullah
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில் காஷ்மீரில் தேர்தல் நடத்த பாஜக தயங்கும் என காஷ்மீர் முன்னாள் முதல்வட் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 224 தொகுதிகளில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிப் பெற்று தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. ஆளும் பாஜக கட்சி 66 தொகுதிகளே வென்று தோல்வி அடைந்துள்ளது. கர்நாடகாவில் பாஜகவின் தோல்வி தேசிய அளவில் உற்று நோக்கப்படுவதுடன், இது நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்கும் என கூறப்படுகிறது.

கர்நாடகாவில் பாஜகவின் தோல்வி குறித்து பேசியுள்ள ஜம்மு&காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா “கர்நாடக தேர்தல் தாக்கத்தால் இனி ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தும் தைரியும் பாஜகவுக்கு இருக்காது. அடுத்து நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு இது ஒரு நல்ல செய்தி. வகுப்புவாத அரசியலை நிராகரித்து நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K