1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 13 மே 2023 (21:20 IST)

பன்மைத்துவம் மற்றும் ஜனநாயக சக்திகள் வெற்றிபெற மக்கள் விரும்பியுள்ளனர் - முதல்வர்

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல்  கடந்த 10 ஆம்  தேதி நடைபெற்ற நிலையில், இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே போட்டி இருந்த நிலையில், இன்றைய வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 137 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக 66 இடங்களிலும், மஜத 22 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

எனவே, காங்கிரஸ் 137 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. இதை அக்கட்சியினர்  நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸ் வெற்றி  முரட்டுத்தனமான சர்வாதிகாரம் மற்றும் பெரும்பானையை அரசியல் ஒழிந்தது என்று மேற்கு வங்க  மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கர்நாடக மக்கள் மாற்றத்திற்கு ஆதரவாக தீர்க்கமான முடிவை வழங்கியுள்ளீர்கள் உங்களுக்கு எனது வணக்கங்கள். முரட்டுத்தனமான சர்வாதிகாரம் மற்றும் பெரும்பான்மை அரசியல் ஒழிந்தது. பன்மைத்துவம் மற்றும் ஜனநாயக சக்திகள் வெற்றிபெற மக்கள் விரும்பியுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளார்.