1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 7 ஆகஸ்ட் 2021 (18:28 IST)

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜுக்கு ரூ. 6 கோடி பரிசு - ஹரியானா அரசு

ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு  ஹரியான மாநில அரசு பரிசுத் தொகை  அறிவித்துள்ளது.

ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக்-2020 போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தியா சார்லில் மீரா சானு என்பவர் பளுதூக்குவதலில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்தார்.

இந்திய பாட்மிண்ட வீராங்கனை பிவி.சிந்து மகளிர் பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தார். இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தது.

இந்நிலையில் இன்று டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்க பதக்கம் வென்றார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிற்கு 7 வது பதக்கம் கிடைத்துள்ளது. இதுவரை டோக்கியோ ஒலிம்பிக்கில் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என இந்தியா மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு  ஹரியான மாநில அரசு பரிசுத் தொகை  அறிவித்துள்ளது.

இதுகுறித்து அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  ஒலிம்பிக்கில்  தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ.6 கோடி பரிசுத் தொகை எனவும், கிரேட் 1 அரசுப் பணி வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.

மேலும், இன்று சரித்திரத்தில் முக்கிய நாள் என இந்தியா மக்கள் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்ற்னர்.