ஆட்டோமொபைல் துறை சரிவுக்கு ஓலா, ஊபேர் காரணமா? மறுக்கும் மாருதி

sivalingam| Last Updated: வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (08:24 IST)
கடந்த சில மாதங்களாக ஆட்டோமொபைல் துறையில் அதலபாதாளத்துக்கு சென்றுள்ள நிலையில் இந்தத் துறையின் சரிவுக்கு ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களின் வாகனங்களை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துவதே காரணம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இந்த கருத்துக்கு மாருதி நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது


பொதுமக்கள் அதிகம் பேர் ஓலா, உபேர் வாகனங்களை அதிகம் பயன்படுத்துவது பயன்படுத்தி வருகின்றனர். குறைந்த கட்டணத்தில் 24 மணி நேரமும் இந்த நிறுவனத்திடம் இருந்து சேவை கிடப்பதாலும், சொந்த வாகனம் வாங்கினால் டீசல், பெட்ரோல், டிரைவர், பராமரிப்பு போன்ற செலவுகள் மட்டுமின்றி பார்க்கிங் பிரச்சனை அதிகம் இருப்பதாலும், சொந்த வாகனங்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.


இதனால் சொந்த வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் இருந்து படிப்படியாக நீங்கி வருவதாகவும் இதனால் ஆட்டோமொபைல் துறையின் சரிவிற்கு ஒரு காரணம் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட பலர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இதனை மாருதி நிறுவனம் மறுத்துள்ளது. ஓலா, உபேர் போன்ற நிறுவனங்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தியாவில் சேவைசெய்து வருவதாகவும் ஆனால் தற்போது மூன்று மாதங்களில் மட்டுமே ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி கடுமையாக சரிந்து வருவதாகவும் கூறியுள்ள மாருதி நிறுவனம், அமெரிக்காவில் இந்தியாவை போலவே ஓலா, உபேர் நிறுவனங்களின் வாகனங்கள் அதிகம் இருந்தலும், அங்கு ஆட்டோமொபைல் துறை நல்ல வளர்ச்சியில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது


மேலும் இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையின் சரிவிற்கு முக்கிய காரணம் பணவீக்கம் மற்றும் இன்சூரன்ஸ் திட்டங்களின் கடுமையான விலை உயர்வு என்பதுதான் என்றும் இந்த வீழ்ச்சிக்கு சரியான காரணத்தை ஆய்வு செய்து அதற்குத் தீர்வு காண வேண்டும் என்றும் மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது


இதில் மேலும் படிக்கவும் :