1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 11 அக்டோபர் 2022 (22:52 IST)

சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட இளைஞர் அதிரடி கைது

police station
வாங்கப்பாளையம் போலீஸ் அதிரடி சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட இளைஞர் அதிரடி கைது.
 
கரூர் அருகே வெங்கமேடு அருகம்பாளையம் பகுதி மந்தைக்கு எதிரே முள்ளுக்காட்டில் மதுவிற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகின.

மீலாதுநபி அன்று மதுவிற்க கூடாது என்று காவல்துறை எச்சரித்தும், அந்த பகுதியில் ரோந்து சென்ற வாங்கப்பாளையம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கனகராஜ் மற்றும் போலீஸார், தீவிர சோதனை நடத்தியதில், அதே பகுதியினை சார்ந்த மருதமுத்து மகன் அழகர் (29) என்பவர் சட்டவிரோதமாக மதுவிற்றது தெரியவந்தது.

இதனடிப்படையில் அவரை கைது செய்து அவரிடமிருந்து 10 பாட்டில்கள் பறிமுதல் செய்து வாங்கப்பாளையம் போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.

Edited by Sinoj