வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 17 நவம்பர் 2021 (15:58 IST)

தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு 350 சதவீதம் ஆபத்து அதிகம்!

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு செலுத்திக் கொண்டவர்களை விட 3.5 மடங்கு ஆபத்து அதிகம் என பொது சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்தியாவில் தடுப்பூசி போடும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் துரிதமாக நடந்து வருகின்றன. சமீபத்தில் இந்தியா 100 கோடி தடுப்பூசிகள் என்ற மைல்கல்லை எட்டியது. இந்நிலையில் இதுவரை மாநிலங்களுக்கு மொத்தமாக 125.74 கோடி தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகளை மொத்தமாக வாங்கி மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அனுப்பி வருகிறது.

இந்நிலையி கடந்த மூன்று மாதங்களில் கொரோனாவால் இறந்தவர்களைப் பற்றி நடத்திய ஆய்வில் 84 சதவீதம் பேர் தடுப்பூசி போடாததால் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களுக்கு 3.5 மடங்கு ஆபத்து அதிகம் உள்ளது. இதனால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.