ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 24 செப்டம்பர் 2018 (18:49 IST)

சர்காரின் 'சிம்டங்காரன்' அதிருப்தியில் விஜய் ரசிகர்கள்

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'சர்கார்' படத்தின் சிங்கிள் பாடலான 'சிம்டங்காரன்' என்று தொடங்கும் பாடல் சற்றுமுன் இணையத்தில் வெளியாகியது. இந்த பாடலை கேட்ட விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக தெரிகிறது.

மெர்சல்' படத்தில் இடம்பெற்ற 'ஆளப்போறான் தமிழன்' ரேஞ்சுக்கு எதிர்பார்த்த விஜய் ரசிகர்கள் பல வார்த்தைகள் புரியாமலும் சுமாரான டியூனிலும் வெளிவந்திருக்கும் இந்த பாடலால் அதிருப்தி அடைந்திருப்பதாக பதிவு செய்து வருகின்றனர்.

'சிம்டங்காரன்' என்றால்  'கவர்ந்து இழுப்பவன்,  பயமற்றவன், மற்றும் துடுக்கானவன்' என்று பாடலாசிரியர் தனது டுவிட்டரில் சில மணி நேரங்களுக்கு முன் விளக்கம் அளித்திருந்தபோதிலும் இந்த பாடல் அனைவரையும் கவரவில்லை என்பதே உண்மை.

அக்டோபர் 2ஆம் தேதி இந்த படத்தின் மற்ற பாடல்கள் வெளியாக உள்ளது. மற்ற பாடல்களாவது ரசிகர்களை திருப்தி செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்