வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (17:31 IST)

விஜய் சேதுபதியின் தைரியம் மற்ற ஹீரோக்களுக்கு இருக்காது- அட்லீ

ஜவான் பட இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்று வரும் நிலையில், இவ்விழாவில் பேசியா அட்லீ ’'விஜய் சேதுபதியின் தைரியம்  மற்ற நடிகர்களுக்கு இருந்திருக்காது'' நஎன்று தெரிவித்துள்ளது. 

பாலிவுட்  சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். இவர்  நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள படம்  ஜவான். இப்படத்தின்  ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன

இப்படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து, விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன்  மற்றும் யோகி பாபு நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் இப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீஸாகிறது.

ஏற்கனவே இப்படத்தின் 3 சிங்கில்கள் வெளியாகி வைரலாகின. இந்த நிலையில் இந்த படத்தின் 
ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி  இன்று  சென்னை சாய்ராம் கல்லூரியில் நடந்து வருகிறது.  . அதில் படத்தின் கதாநாயகன் ஷாருக்கான், யோகிபாபு, விஜய்சேதுபதி இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பங்கேற்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் அட்லீ,

‘’இப்படத்தில் வில்லனாக விஜய்சேதுபதி  நடித்திருக்கிறார். இப்படத்தில் அவர் வில்லனாக வந்துள்ள நிலையில், அவர் செய்ததை வேறு எந்த ஹீரோவும் பண்ண முடியாது’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘’விஜய் சேதுபதியின் தைரியம் அவர்களுக்கு இருந்திருக்காது என்று கூறி நீங்கள் போகும் உயரத்திற்கு வேறு யாரும் வரமுடியாது’’ என்று விஜய் சேதுபதியை பாராட்டினார்.

ஏற்கனவே விஜய்சேதுபதி விக்ரம் வேதா, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் வில்லன் வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.