வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (16:14 IST)

இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த டிரைலர்… ஜவான் படத்தை ஓவராக புகழ்ந்த பாலிவுட் இயக்குனர்!

பாலிவுட்  சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தில் தமிழ் நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தமிழ் இயக்குனர் மற்றும் தமிழ் நடிகர்கள் பட்டாளம் இருப்பதால் இந்த படத்துக்கு தமிழ்நாட்டிலும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தின் விநியோக உரிமை 16 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. ஷாருக்கானின் படங்களிலேயே அதிக தொகைக்கு தமிழகத்தில் விற்கப்பட்ட படமாக ஜவான் அமைந்துள்ளது.

இந்நிலையில் விரைவில் இந்த படத்தின் டிரைலர் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் இந்த டிரைலரை பார்த்ததாக பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் தெரிவித்துள்ளார். மேலும் ஜவான் டிரைலரை இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த டிரைலர் எனவும் புகழ்ந்துள்ளார்.