ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 12 ஜூன் 2021 (11:24 IST)

லைசன்ஸ் வாங்க இனி 8 போட தேவையில்லை!

ஓட்டுநர் உரிமம் பெற அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் முறையாகப் பயிற்சியை முடித்தாலே போதுமானது என அறிவிப்பு. 

 
டிரைவிங் லைசென்ஸ் பெற வேண்டும் என்றால் தனியார் ஓட்டுநர் பள்ளிகளில் பயிற்சி பெற்றிருந்தாலும், ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் நடக்கும் சோதனையில் தேர்ச்சி பெற்றால்தான், 8 போட்டு காட்டினால்தான் லைசென்ஸ் வழங்கப்படும்.
 
இந்நிலையில், ஓட்டுநர் உரிமம் பெற அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் முறையாகப் பயிற்சியை முடித்தாலே போதுமானது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் ஜூலை 1 அம் தேதியில் இருந்துநடைமுறைக்கு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.