1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 12 ஜூன் 2021 (10:01 IST)

85,000-த்திற்கு கீழ் தினசரி பாதிப்பு - இந்திய கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிதாக 84,332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 2 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது. 
 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிதாக 84,332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,93,59,155 ஆக உயர்ந்தது. மேலும், புதிதாக 4,002 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,67,081 ஆக உயர்ந்துள்ளது.
 
அதோடு தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,21,311 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,79,11,384 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10,80,690 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.