வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: வியாழன், 7 ஜூலை 2022 (17:36 IST)

பைரவரின் காயத்ரியை எந்த தினத்தில் படிப்பதால் நன்மைகள் கிடைக்கும்...?

Bhairavar
தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அஷ்ட பைரவர்களையும் வளர்பிறை அஷ்டமி நாளில் பைரவ வழிபாடு செய்பவர்கள்,ஒரு போதும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு செய்யக் கூடாது மீறினால் வழிபாட்டின் பலன்கள் கிடைப்பது கடினம்.


ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கவசத்துடன் பொன் நிறமாக சர்வானந்த கோலாகலராக கற்பக விருட்சத்தின் மேல் கங்கா ஜடா முடியுடன், சந்திர பிரபை சூடி, திருக்கழுத்தில் நாகபரணம் அணிந்து திருக்கரங்களில் சங்க நிதி பத்ம நிதியுடனும் மடியில் பூரண கும்பத்துடன் பத்ர பீடத்தில் அமர்ந்திருக்க அதன் பின்னே சொர்ண பைரவி ஸ்ரீமஹா சொர்ணகால பைரவப் பெருமானின் அருகில் வந்து அமர்ந்து ஒரு திருக்கரத்தால் ஸ்ரீமஹா சொர்ணகால பைரவப் பெருமானின் இடையை தழுவியவாறு மற்றொரு திருக்கரத்தில் சொர்ண கும்பத்துடன் அருகில் வந்து அமர்ந்து புன்னகை தவழும் திருமுகத்துடன் உலகிற்கு பொன்னையும் பொருளையும் அள்ளித்தரும் கோலத்துடன் எழுந்தருளியுள்ளார். வளர்பிறை அஷ்டமியில் வழிபட துன்பங்கள் நீங்கி செல்வ வளம் பெருகும்.

பைரவர் பொது காயத்ரி:

சுவாநத் வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தந்தோ பைரவ பிரசோதயாத் !!

பைரவரின் காயத்ரியை அஷ்டமி தினத்தில் சொல்லி வரலாம். அருகில் இருக்கும் ஆலயத்துக்குச் சென்று பைரவரை வழிபடலாம். நவக்கிரக தோஷங்கள் நீங்க சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் சகஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும்.

வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமிகளில் மாலை நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரமோ, சகஸ்ரநாமமோ அர்ச்சனை செய்து 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். அஷ்டமிகளில் தொடர்ந்து வழிபடவேண்டும்.