கேஸ் விலை உயர்ந்தாலும் மக்களுக்கு பாதிப்பில்லை: ஏன் தெரியுமா?

cylinder
கேஸ் விலை உயர்ந்தாலும் மக்களுக்கு பாதிப்பில்லை
Last Modified வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (13:34 IST)
இதுவரை பத்து ரூபாய் இருபது ரூபாய் முதல் அதிகபட்சமாக 50 ரூபாய் வரை சிலிண்டரின் விலை ஏற்றம் கண்டு இருந்த நிலையில் டெல்லி தேர்தல் காரணமாக இரண்டு மாதங்களாக சிலிண்டரின் விலை ஏறாமல் இருந்தது. இந்த நிலையில் தேர்தல் முடிவு வந்த உடனே திடீரென சிலிண்டர் விலை 147 என உயர்ந்து தற்போது சென்னையில் மானியமில்லா சிலிண்டர் விலை 881 ஆக இருக்கிறது. இதனால் சிலிண்டர் உபயோகிப்பாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்

இது குறித்து அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள அறிக்கையின்படி இந்த சிலிண்டர் விலை ஏற்றத்தால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து பெட்ரோலியத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ’சமையல் கேஸ் விலை உயர்ந்தாலும் மானிய தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு சிரமம் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது
உதாரணமாக இதுவரை வாடிக்கையாளர்களுக்கு 153 ரூபாய் மானியமாக வழங்கப்பட்டு வந்ஹ நிலையில் விலை ஏற்றத்திற்கு பின்னர் 292 ரூபாய் மானியமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், மானியத்தொகை உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் பெட்ரோலிய துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதனால் சிலிண்டர் விலை ஏறினாலும் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது இருப்பினும் இந்த விலை ஏற்றத்தை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு அரசு அதிக தொகை வருவதால் அரசுக்கு கூடுதல் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :