1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 7 நவம்பர் 2019 (07:43 IST)

சதத்தை நெருங்கும் வெங்காயம் விலை: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

கடந்த சில நாட்களாக வெங்காய விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில் வெங்காயம் விலை கிலோ 100 ரூபாய்க்கு மிக நெருங்கி வந்து விட்டதை அறிந்து பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்
 
எந்த வகை சமையல் என்றாலும் வெங்காயம் இல்லாமல் சமைக்க முடியாது என்பதால் வெங்காயம் சமையலுக்கு மிக அத்தியாவசியமான பொருளாக கருதப்படுகிறது. குறிப்பாக வட மாநிலத்தில் உள்ளவர்கள் வெங்காயம் இல்லாமல் எந்த உணவையும் சாப்பிட மாட்டார்கள் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை கிடுகிடு என உயர்ந்து தற்போது 80 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இதன் விலை ரூபாய் 100க்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் வெங்காயத்தின் விலை அனைவரையும் பாதிக்கும் என்பதால் உடனடியாக வெங்காயத்தை ஏழை மக்களுக்கும் கிடைக்கும் வகையில் இறக்குமதி செய்து வெங்காய தட்டுப்பாட்டை தீர்க்க வேண்டும் என்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது
 
இது குறித்து மூத்த அதிகாரிகள் ஆலோசனை செய்ததாகவும் இதனை அடுத்து ஈரான், எகிப்து, துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
மேலும் மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் தற்போது வெங்காய விளைச்சல் நன்றாக இருப்பதால் இன்னும் ஒரு சில நாட்களில் வெங்காய அறுவடை செய்யப்பட்டு அந்த வெங்காயங்கள் சந்தைக்கு வந்துவிடும் என்பதால் வெங்காயத்தின் விலை சீராக வாய்ப்பு இருப்பதாகவும் மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது