வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (18:48 IST)

முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு தேதி மாற்றமா? மத்திய அரசு அறிவிப்பு

neet
முதுநிலை நீட் தேர்வுக்கான தேதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை மாணவர்கள் மத்தியில் எழுந்த நிலையில் திட்டமிட்டபடி மார்ச் 5ஆம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 
 
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை தள்ளி வைக்க கோரி மாணவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர் என்பதும் எதிர்க்கட்சிகளும் இந்த கோரிக்கைகளை ஆதரித்தன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கொரோனா வைரஸ் சிகிச்சை பணியில் ஈடுபட்டதால் தேர்வு தேதியை தள்ளி வைக்க இந்திய மருத்துவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தன
 
இந்த நிலையில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மார்ச் ஐந்தாம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திட்டமிட்டபடி அதே தேதியில் நடைபெறும் என்றும் முதுநிலை நீட் தேர்வில் மாற்றம் இல்லை என்றும் மத்திய அரசு உறுதிபட கூறி உள்ளது.
 
Edited by Siva