1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 31 மார்ச் 2020 (08:55 IST)

கொரோனா வைரஸ் எதிரொலியால் நிதியாண்டு மாற்றமா?

கொரோனா வைரஸ் எதிரொலியால் நிதியாண்டு மாற்றமா?
ஒவ்வொரு நிதியாண்டும் ஏப்ரல் முதல் மார்ச் வரை இருக்கும் என்பது அனைவரும் தெரிந்ததே. ஆனால் கொரோனா வைரஸ் எதிரொலியாக திடீரென இந்த ஆண்டின் நிதியாண்டு மாதம் மாற்றப்பட்டதாக ஒருசில ஊடகங்களில் தகவல் வெளிவந்தது.
 
கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நிகழ்ச்சிகள் மாற்றப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அனைத்து கடைகளிலும் புது கணக்கு போடுவார்கள் என்பதும் வருமானவரி கணக்குகளை  நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அதாவது நாளை முதல் தொடங்குவதும் அறிந்ததே. ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து கடைகளிலும் புதுக் கணக்கு போடுவது முதல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது வரை அனைத்து பணிகளும் செய்ய முடியாத நிலை உள்ளது.
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக மத்திய அரசு நிதியாண்டு மாதத்தை திடீரென மாற்றியுள்ளதாகவும், இனி ஏப்ரல் 1க்கு பதிலாக ஜூன் 1-ஆம் தேதி முதல் நிதியாண்டு கணக்கில் கொள்ளப்படும் என்றும் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது
 
ஆனால் இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என்றும் நிதியாண்டு மாதத்தை மாற்றும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்றும் வழக்கம்போல் ஏப்ரல் முதல் தேதியே நிதியாண்டின் தொடக்கமாக தொடரும் என்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது