450 கிலோ மீட்டர் நடந்தே சென்று பணியில் சேர்ந்த காவலர்: ஆச்சரிய தகவல்

450 கிலோ மீட்டர் நடந்தே சென்று பணியில் சேர்ந்த காவலர்:
Last Modified செவ்வாய், 31 மார்ச் 2020 (08:40 IST)
450 கிலோ மீட்டர் நடந்தே சென்று பணியில் சேர்ந்த காவலர்:
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் விடுமுறை முடிந்து மீண்டும் பணியில் சேர 450 கிலோ மீட்டர் நடந்தே சென்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

மத்திய பிரதேசத்தில் திக்விஜய் சிங் என்பவர் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் சமீபத்தில் விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்த நிலையில் திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து விடுமுறை முடிந்து அவர் மீண்டும் பணியில் சேருவதில் சிக்கல் இருந்தது
இந்த நிலையில் அவர் தனது மேலதிகாரிகளிடம் இதுகுறித்து கூறியபோது ஊரடங்கு உத்தரவு முடியும் வரை பணியில் சேர வேண்டாம், வீட்டிலேயே இருங்கள் என அறிவுறுத்தியதாக தெரிகிறது. ஆனால் கடமையே கண்ணாக இருக்கும் அந்த வாலிபர் கால்நடையாகவே சென்று பணியில் சேர முடிவு செய்தார்

இதனை அடுத்து அவர் 450 கிலோ மீட்டர் நடந்தே மத்திய பிரதேசத்தில் இருந்து உத்தரபிரதேசம் சென்றார். இடையில் ஒரு சில சமூக சேவகர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் தங்களால் முடிந்த அளவு அவருக்கு லிப்ட் கொடுத்து உதவியுள்ளனர். அதுமட்டுமின்றி பலர் தண்ணீர் மற்றும் உணவுகளையும் கொடுத்து அந்த காவலருக்கு உதவி செய்துள்ளனர்
450 கிலோ மீட்டர் நடந்தே சென்று பணிக்குத் திரும்பிய அந்த வாலிபருக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். இருப்பினும் அவர் உடல் களைப்புடன் இருப்பதை கண்டு ஓரிரு நாட்கள் மட்டும் ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கும் இந்த நிலையில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக தான் 450 கிலோ மீட்டர் நடந்து சென்று பணியில் சேர வந்திருப்பதாக அந்த வாலிபர் கூறியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு நெட்டிசன்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்


இதில் மேலும் படிக்கவும் :